அதிரடி! சூர்யா சிவாவின் பொறுப்புகளை பறித்த அண்ணாமலை!!

அதிரடி! சூர்யா சிவாவின் பொறுப்புகளை பறித்த அண்ணாமலை!!
X

பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, திருச்சி சூர்யா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, திருப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு வந்த திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் விசாரணைக் குழு முன்பு ஆஜராகினர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், பிரச்னையை சுமுகமாக முடித்துக் கொண்டதாக தெரிவித்தனர்.இந்த நிலையில் சூர்யா சிவாவின் பொறுப்புகள் பறிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நற்பண்புகளுடன் நூற்றுக்காணக்கான் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்பதால், ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம் என அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it