குக்கர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள அமைப்பு!!

குக்கர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள அமைப்பு!!
X

கர்நாடகா மாநிலம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஒரு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பை தொடர்ந்து மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்தது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணித்த நபர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் வெடித்தது குக்கர் குண்டு என தெரியவந்தது.

ஆட்டோவில் பயணித்த நபரின் பெயர் ஷாரிக் என்பதும், அவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகித்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.அதில் ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கர்நாடகா காவல்துறை தெரிவித்துள்ளது. இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என குறிப்பிட்டு அந்த அமைப்பினர் கடிதம் எழுதி உள்ளனர்.

இதுகுறித்து பேசிய கர்நாடகா கூடுதல் டிஜிபி, அமைப்பின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் ஷாரிக் இந்து கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்மிட்டதாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it