1. Home
  2. விளையாட்டு

அரசு கேபிள் டிவியில் இலவசமாக கால்பந்து போட்டியை பார்க்கலாம்..!

அரசு கேபிள் டிவியில் இலவசமாக கால்பந்து போட்டியை பார்க்கலாம்..!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சி சேனலை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like