1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைனில் வெடிமருந்து – விசாரணைக்கு பிறகு இளைஞர் கைது!!

ஆன்லைனில் வெடிமருந்து – விசாரணைக்கு பிறகு இளைஞர் கைது!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆன்லைனில் வெடி மருந்து வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த மே மாதம் 13ஆம் தேதி பிளிப்கார்ட் மூலம் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது.

அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்திய போது, அவர் பொருட்களை வாங்கவில்லை என்றும், தனது பழக்கடையில் வேலை செய்யும் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாங்கியதாக கூறினார்.


ஆன்லைனில் வெடிமருந்து – விசாரணைக்கு பிறகு இளைஞர் கைது!!

இதனயைடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாரியப்பனை கோவை காவலர் பயிற்சி வளாகத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது, தனது எதிரி மகாராஜன் என்பவர் மீது குண்டு வீசி கொலை செய்வதற்கு வாங்கியதாக மாரியப்பன் தெரிவித்தார்.

மேலும் மாரியப்பன் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, தேசிய புலனாய்வு முகமையினர் மாரியப்பனை சரவணம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு விசாரணையை முடித்துக் கொண்டனர்.

அதன்பிறகு, மாரியப்பனிடம் சரவணம்பட்டி போலீசார் மேல் விசாரணையை தொடங்கினர். அவரிடம் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், மாரியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like