நாளை அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகிறது சூப்பர் ஹிட் திரைப்படம்..!!

நாளை அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகிறது சூப்பர் ஹிட் திரைப்படம்..!!
X

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இந்தியாவில் அதிக அளவு பேசப்படும் படமாக அமைந்த படம் "காந்தாரா".விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் நில அரசியல் அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோண கதைகளத்தில் அமைந்துள்ளது.பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் இப்படம் பதிவு செய்துள்ளது.

ரிஷப் ஷெட்டி என்பவர் இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த கிஷோர் மற்றும் சப்தமி கவுடா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


கன்னடத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பின் படம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

திரையரங்கில் வெறிகரமாக ஓடிகொண்டிருக்கும் 'காந்தாரா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது அதாவது படம் நாளை நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Next Story
Share it