1. Home
  2. தமிழ்நாடு

வெளியான அதிர்ச்சி வீடியோ..!! ஈடிவி பாரத் உதவி ஆசிரியர் கார் விபத்தில் சிக்கி பலி..!!

வெளியான அதிர்ச்சி வீடியோ..!! ஈடிவி பாரத் உதவி ஆசிரியர் கார் விபத்தில் சிக்கி பலி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நிவேதிதா சூரஜ். கடந்த 19-ம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சூரஜ் - பிந்து தம்பதியின் மகள் நிவேதிதா. இவர் ஊடகத்துறையில் பட்டம் பெற்றவர். 2021-ம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தின் கேரள பிரிவில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.


வெளியான அதிர்ச்சி வீடியோ..!! ஈடிவி பாரத் உதவி ஆசிரியர் கார் விபத்தில் சிக்கி பலி..!!

இவர் ஐதராபாத்தின் பாக்யலதா பகுதியில் தங்கி நாள்தோறும் அலுவலக பேருந்து மூலமாக பணிக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல மகாராஷ்டிராவைச் சேர்ந்த சோனாலி சாவ்ரே என்பவரும் ஈடிவி பாரத் ஊடகத்தின் உத்தரப் பிரதேச பிரிவில் உதவி ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவரும் பாக்யலதாவிலிருந்து அலுவலக பேருந்தில் பணிக்கு சென்று வருவார். அதன்படி, இருவரும் கடந்த 19-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டனர்.

அப்போது சாலையை கடக்கும்போது எல்.பி.நகரில் இருந்து ஹயாத் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருவர் மீதும் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் நிவேதிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சோனாலி சாவ்ரே படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே கார் ஓட்டுநர் தப்பி ஓடினார்.



இதுகுறித்து ஹயாத் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிவேதிதாவின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்கு கடந்த 20-ம் தேதி படியூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Trending News

Latest News

You May Like