1. Home
  2. தமிழ்நாடு

சாலமன் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சாலமன் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.


பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.


சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில், சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like