வெளியே கோகோ கோலா… உள்ளே பீர்! ரசிகரின் புத்திசாலித்தனம்!!

வெளியே கோகோ கோலா… உள்ளே பீர்! ரசிகரின் புத்திசாலித்தனம்!!
X

உலகக்கோப்பைக்காக பல்வேறு நாட்டின் ரசிகர்களும் கத்தார் வந்துள்ள நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மதுபானம் அவர்களின் தினசரி செயல்பாட்டில் ஒரு அங்கமாக இருக்கிறது.

ஆனால் தீவிர இஸ்லாமிய நாடான கத்தாரில் மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மைதானத்தில் மட்டும் ஆல்கஹால் இல்லாத பீர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கத்தார் நாட்டுக்குள் மதுபானங்களை சிலர் கடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், மைதானத்தில் கோக்கோ கோலா பாட்டிலில் சிலர் எடுத்து வருவதாக கத்தார் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்களை சோதனை செய்ததில் அதில் ஒருவர் பீர் பாட்டிலில் கோக்கோ கோலா ஸ்டிக்கரை ஒட்டி எடுத்துவந்தது தெரியவந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், பலரும் அந்த ரசிகருக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தனர். அந்த ரசிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it