1. Home
  2. விளையாட்டு

கேப்டன் பதவியில் இருந்து பூரன் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி..!!

கேப்டன் பதவியில் இருந்து பூரன் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது. இந்தத் தொடரில் இரு முறை டி20 உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணி அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இதன் மூலம் அந்த அணி கடுமாயான விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த அணியில் கேப்டன் பூரன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, டி 20 உலகக் கோப்பையின் பெரும் ஏமாற்றத்திற்குப் பிறகு நான் கேப்டன் பதவியைப் பற்றி நிறைய யோசித்தேன். நான் கேப்டன் பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் மிகுந்த பெருமையுடனும், அர்ப்பணிப்புடனும் எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன்.

கேப்டன் பதவியில் இருந்து பூரன் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி..!!

டி20 உலக கோப்பை என்பது நம்மை வரையறுக்காத ஒன்று, வரவிருக்கும் அடுத்த போட்டிகளுக்கு என்னை தயார் செய்து கொள்வேன். நாங்கள் மீண்டும் ஒரு அணியாக ஒன்று கூடுவதற்கு பல மாதங்கள் ஆகும் என்றாலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகத்துக்கு நிறைய நேரம் கொடுக்க விரும்புகிறேன். இது நான் விட்டுக்கொடுப்பது இல்லை. கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி உங்களுக்கு கிடைத்த கௌரவமாகவே நான் கருதுகிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதில் சந்தேகமில்லை. ஒரு மூத்த வீரராக எனது பணியை செய்ய ஆர்வமாக உள்ளேன். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது அணியின் நலனுக்காகவும், தனிப்பட்ட முறையில் எனக்காகவும் சிறந்தது என்று நான் நம்புகிறேன், ஏனெனில் ஒரு வீரராக அணியில் நான் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்.



முக்கியமான தருணங்களில் தொடர்ந்து ரன்கள் குவிப்பதில் முழுமையாக கவனம் செலுத்துவதன் மூலம் நான் அணிக்கு அதிக பங்களிப்பு கொடுக்க முடியும் என நினைக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்துக்கும், ரசிகர்களிடமிருந்து நான் பெற்ற ஆதரவிற்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கேன். உங்களுக்கு நன்றி.

எனது அணியினர் மிகவும் கடுமையாக உழைத்தனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எங்களால் முடியும் என்பதை நான் அறிவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Trending News

Latest News

You May Like