'கலகத் தலைவன்' பாத்தீங்களா..?: அமைச்சரிடம் கேட்ட முதல்வர்..!

கலகத் தலைவன் பாத்தீங்களா..?: அமைச்சரிடம் கேட்ட முதல்வர்..!
X

நடை பயிற்சியின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் 'கலகத் தலைவன்' திரைப்படம் பார்த்தீர்களா.. எப்படி இருக்கிறது..? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. இந்தப் படத்தின் 'பிரிவியூ ஷோ' பார்த்த உதயநிதியின் தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உதயநிதி உட்பட ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.


இதுவரை நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 'கண்ணே கலைமானே', 'மனிதன்', 'நெஞ்சுக்கு நீதி', 'சைக்கோ' என வரிசையாக சமூக அக்கறை மிகுந்த கதைக்களத்தையே தேர்வு செய்து வருகிறார். இப்போதும் கூட 'மாமன்னன்' திரைப்படத்தை அவ்வாறு தேர்வு செய்து தான் அதில் நடித்து வருகிறார்.


இந்தநிலையில், சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, 'கலகத் தலைவன்' படம் பார்த்தீர்களா.. எப்படி உள்ளது..?" என அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு, "முதல் நாளே திரைப்படத்தை பார்த்தேன்; படம் நல்லா வந்திருக்கிறது" என்று அமைச்சர் பதில் அளித்தார். தொடர்ந்து, 'கலகத் தலைவன்' படம் குறித்து பேசிக்கொண்டே இருவரும் நடந்தனர்.

Next Story
Share it