1. Home
  2. தமிழ்நாடு

கர்ப்பமான சிறுமியை கிணற்றில் வீசிய ஆசிரியர்!!

கர்ப்பமான சிறுமியை கிணற்றில் வீசிய ஆசிரியர்!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியைச் சேர்ந்த சிவேந்திரா என்பவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி சிறிது நாட்களுக்கு பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ஆசிரியரிடம் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆசிரியர் கருவை கலைக்க மருந்து ஒன்றை கொடுத்துள்ளார்.


கர்ப்பமான சிறுமியை கிணற்றில் வீசிய ஆசிரியர்!!

அதை குடித்ததும் சிறுமி மயக்கமடைந்தார். அவர் சிறுமிக்கு விஷம் கொடுத்தது பின்னர் தெரியவந்தது. சிறுமி உயிரிழந்ததை அடுத்து அவரது சடலத்தை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்றார்.

அங்கே இருந்த வற்றி போன கிணற்றில் சிறுமியின் உடலை போட்டுவிட்டு சென்றார். சிறுமியின் சடலத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சிறுமியை கொன்றது ஆசிரியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்ஸோ மாற்றும் கொலை வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like