1. Home
  2. தமிழ்நாடு

காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன்!!

காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன்!!

அசாம் மாநிலம் கவுகாதியில் பிதுபன் தமுளி (27) என்ற இளைஞரும், பிராத்தனா போரா என்ற இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இதனிடையே இளம்பெண் பிராத்தனாவுக்கு சில நாட்களாக உடல்நல கோளாறு ஏற்பட்டது.

இதனால் அவர் கௌகாதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.


காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன்!!


இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக கொண்டு வரப்பட்டது. அவருக்கு இறுதி சடங்கு நடக்கும்போது திடீரென பிதுபன் வெளியில் சென்றார். பின்னர் அவர் தனது கையில் மாலை, குங்குமம், தாலி உள்ளிட்டவற்றை எடுத்து வந்தார்.

பின்னர் அவர், இறுதி சடங்கிற்கு வைக்கப்பட்ட காதலியின் உடலுக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


newstm.in

Trending News

Latest News

You May Like