ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய்!!
நடிகர் விஜய் தனது ரசிகர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். விஜய் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதை தள்ளி வைத்திருந்த நடிகர் விஜய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பனையூரில் அவரது அலுவலகத்தில் சில ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதற்காக நடிகர் விஜய் இன்று தனது அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். ரசிகர்களின் ஆரவாரத்தோடு விஜய் காரில் வந்து இறங்கினார். வாரிசு படத்தின் ஹேர் ஸ்டைலுடன் படு உற்சாகமாக காணப்பட்ட விஜய், ரசிகர்களை பார்த்து கையசைத்து, அவர்களின் வரவேற்பை ஏற்றார்.
மேலும் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. வாரிசு படம் தொடர்பாகவும், மக்கள் இயக்கம் குறித்து விஜய் பேசியதாக கூறப்படுகிறது. ரசிகர்களை விஜய் சந்திக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in