பிரதமர் மோடியை கண்டு வியப்பதாக இளையராஜா பேச்சு!!

பிரதமர் மோடியை கண்டு வியப்பதாக இளையராஜா பேச்சு!!
X

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒருபகுதியாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுடன், தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா திரைப்பட பாடலான ஜனனி, ஜனனி பாடலை பாடிய படி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து ஓம் சிவோஹம் என்ற பாடலை பாடி அனைவரையும் மெய் சிலிர்க்க செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என இங்கு விளக்கி விளக்கி அனைவரும் பேசி கொண்டிருந்தனர் என தெரிவித்தார்.

அப்படிப்பட்ட இந்த புண்ணிய பூமியான காசியில் தமிழ் சங்கமத்தை நடத்த எப்படி பிரதமருக்கு யோசனை வந்தது என்பதை வியந்து வியந்து மகிழ்கிறேன். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் புகழும் கொடுக்க வேண்டும் என வாழ்த்தினார்.


newstm.in

Next Story
Share it