1. Home
  2. தமிழ்நாடு

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

கதிர் இயக்கத்தில், கடந்த 1996-ம் ஆண்டு தமிழில் வெளியான 'காதல் தேசம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, அப்பாசுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. 'விஐபி', 'மின்னலே', 'பூச்சூடவா', 'பூவேலி', 'படையப்பா', 'சுயம்வரம்', 'மலபார் போலீஸ்', 'திருட்டுப்பயலே' உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தன.


காதல் தேசம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பிரேம தேசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றதால் தெலுங்கு ஆடியன்ஸ் மனதிலும் இடம்பிடித்தார் அப்பாஸ். தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என அனைத்துப்படங்களிலும் ரவுண்டு கட்டி வந்த அப்பாஸ், இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் அப்பாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், மருத்துவமனையில் இருக்கும்போது கவலைகள் மிக மோசமானவையாக இருக்கும். ஆனால் நான், சில பயங்களை சமாளிக்க முயற்சிக்கிறேன். நான் என் மனதை மேம்படுத்த முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.


அப்பாஸ், என்ன அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இருப்பினும், அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like