ஒரே ஒரு எஸ்எம்எஸ் போதும்.. ரேஷன் கடை இருப்பு விவரம் உங்கள் செல்போனில்..!
ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு மற்றும் கடை திறந்திருக்கும் விவரங்களை நீங்கள் பதிவு செய்த செல்போனில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் விவரத்தை தெரிந்துகொள்ள 'பிடிஎஸ்' என டைப் செய்து இடைவெளி விட்டு 101 என டைப் செய்து 97739 04050 என்ற எண்னுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். அதே முறையில் 'பிடிஎஸ்' இடைவெளி விட்டு 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்துள்ளதா இல்லையா என அறிந்து கொள்ளலாம்.
அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 'பிடிஎஸ் 107' என டைப் செய்து எஸ்எம்எஸ் வாயிலாக புகார் அனுப்பலாம். எனவே, இதுவரை செல்போன் எண்ணை பதிவு செய்யாதவர்களும், மாற்றிய புதிய எண்ணை அப்டேட் செய்யாதவர்களும் உடனே உணவு வழங்கல் அதிகாரிகளிடன் தெரிவித்து பயன் பெறலாம்' எனத் தெரிவித்தார்.