1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களே..!! ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களே..!! ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு..!!

திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி.

இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

Trending News

Latest News

You May Like