1. Home
  2. தமிழ்நாடு

பிணவறையில் பெண்கள் உடலை நிர்வாணமாக வீடியோ எடுத்த இளைஞர்!!

பிணவறையில் பெண்கள் உடலை நிர்வாணமாக வீடியோ எடுத்த இளைஞர்!!

பிணவறைக்கு வரும் பெண்களின் உடலை நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்துவந்த பிணவறை ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் கடகதாலு கிராமத்தை சேர்ந்த சையத் (30) என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு மடிகேரி அரசு மருத்துவமனையில் பிணவறையில் ஒப்பந்த ஊழியராக பணியில் சேர்ந்தார்.

இவர் கடந்த மாதம் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது அந்தபகுதி மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் அவரின் செல்போன் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.


பிணவறையில் பெண்கள் உடலை நிர்வாணமாக வீடியோ எடுத்த இளைஞர்!!

அவர் ஜாமீன் பெற்றுவெளியே வந்த நிலையில், அவரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பிணவறைக்கு வரும் பெண்ணின் சடலங்களின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது.

அதுதவிர பிணவறையில் சில பெண்களோடு அவர் இருக்கும் வீடியோக்களும் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து சையத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணையில், விபத்து மற்றும் தற்கொலை செய்துகொண்டு இறந்து பிணவறைக்கு வரும் பெண்களின் உடலை நிர்வாண புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சையத்தை காவல்துறையினர் தேடிவருகின்றனர். மேலும் பிணவறை ஊழியர்கள் மற்றும் சையத்துடன் பழகி வந்த நர்சு, பெண் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like