கணவன் கண் முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கொள்ளையர்கள்..!

ராஜஸ்தானில், நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நான்கு கொள்ளையர்கள், கணவர் கண்முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி 4 கொள்ளையர்கள் இரவு நேரத்தில் திருடுவதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த வெள்ளிப் பொருட்கள் மற்றும் 1400 ரூபாயை திருடியுள்ளனர். அப்போது, ஒரு அறையில் கணவனும் அவருடைய 45 வயது மனைவியும் உறங்கிக்கொண்டிருந்ததைக் கண்டனர்.
குடிபோதையில் இருந்த நால்வரும், கணவன் கண்முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என இருவரையும் மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கணவன் - மனைவி இருவரும், இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். திருட்டுச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை நடத்தினர். முதலில், திருட்டு சம்பவம் குறித்து மட்டுமே தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்களது முகத்தைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார், மீண்டும் அழுத்தமாக கேட்டபோது, பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ளனர். இருட்டாக இருந்ததால் திருடர்களின் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்றும், சிகரெட் பிடிக்க தீக்குச்சியை பற்ற வைத்தபோது ஒருவனின் முகத்தை மட்டும் பார்த்ததாகவும், அந்த திருடன் கண்ணில் வெள்ளை நிறப்புள்ளி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அடையாளத்தை வைத்து ஒரு திருடனை கண்டுபிடித்த போலீசார், அவன் கொடுத்த தகவல்படி மேலும் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு திருடனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இவர்கள் நான்கு பேரும் புஜேலா, சரூப்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடித்துள்ளனர். ரோஹிடா மற்றும் சரூப்கஞ்ச் காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.