பிரபல நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு!!
மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணி குராலே ஜாதவ் (32) என்ற நடிகை பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் கோலாபூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகே ஹலோந்தி பகுதியில் சிறியதாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஷூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் உணவகத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களை கவனித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் நேற்று முன் தினம் இரவு உணவகத்தில் வேலைகளை முடித்துவிட்டு, சங்கிலி - கோலாபூர் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே கல்யாணி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மும்பை போலீஸார் உடலை கைப்பற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in