கிடா விருந்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது!!
மதுரை திருமங்கலம் அருகே காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கிடா விருந்து நடைபெற்றது. டி கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் நேர்த்திக் கடனுக்காக கிடாய் விருந்து வைத்தார்.
தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் ரியல் எஸ்டேட் மூலம் பழக்கமான நண்பர்களை விருந்துக்கு அழைத்திருந்தார்.
இந்நிலையில் விருந்திற்கு வந்த மதுரையைச் சேர்ந்த வேதகிரி என்பவருக்கும் குருட்டு கணபதி என்பவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் வேதகிரி காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துவந்து வானத்தை நோக்கி சுட அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் விருந்து வைத்த தனசேகரன் மற்றும் சக்திவேல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த வேதகிரியை திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in