குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற பெண்!!
டெல்லி கிழக்கு கைலாஷ் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்பவர் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது தந்தை கடந்த அக்டோபர் மாதம் திடீரென உயிரிழந்தார். தந்தையின் பிரிவை தாங்க முடியாத ஸ்வேதா, அவர் உயிருடன் மீண்டும் வர வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இந்நிலையில், தந்தை மீண்டும் உயிருடன் வரவேண்டுமென்றால், இறந்தவர் எந்த பாலினத்தை சேர்ந்தவரோ, அதே பாலினத்தை சேர்ந்த கை குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என்று ஒருவர் ஸ்வேதாவிடம் கூறியுள்ளார்.
அவரது பேச்சை கேட்ட ஸ்வேதா, பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது இரண்டு மாத குழந்தையை கடத்திச் சென்றார். மயக்கம் தெளிந்த பிறகு அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிசிடிவியை ஆய்வு செய்த போலீஸார் குழந்தை கடத்திச் செல்லப்பட்ட காரின் எண்ணை கண்டறிந்தனர். அதை வைத்து விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் கடத்தப்பட்ட 24 மணி நேரத்திலேயே குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சுவேதாவை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in