குடைக்குள் மழை போல பேருந்துக்குள் மழை..!!
தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதிகளிலும் , அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக மிக கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் அங்கங்கே இருந்த ஓட்டை வழியாக பேருந்துக்குள் மழை பெய்ததால் பயணிகள் பலரும் நனைந்து கொண்டு அவதிப்பட்டு உள்ளனர். சிலர் தாங்கள் வைத்திருந்த குடைகளை விரித்து கொண்டு பிடித்தவாறு பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் கிராம பேருந்துகளில் ஓட்டுநரும் நடத்துநரும் மழையில் நனைந்தபடியே தான் வாகனத்தை இயக்கியிருக்கிறார்கள். அரசு பேருந்துகளை ஆய்வு செய்து மழையில் ஒழுகாதவாறு சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.