காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட இளைஞர்!!
இன்ஸ்டாகிராம் காதலி பணம் பறித்து மோசடி செய்ததால் அவரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட காதலனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த ஷில்பா (22) என்ற இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் காலிக்க தொடங்கினர். இந்நிலையில் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் ஷில்பா பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இருவருடனும் பழகி வந்த அவர், இருவரிடமும் பணம் பறித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் அபிஜித் மற்றும் அவரது பார்ட்னருக்கு தெரிய வர, ஆத்திரமடைந்த இருவரும் ஷில்பாவை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி அபிஜித் ஷில்பாவின் ஊரில் அறை எடுத்து தங்கி, அவரை அழைத்துள்ளார்.
அப்போது அறைக்கு வந்த ஷில்பா திரும்பவில்லை. தனது அறையை பூட்டி விட்டு அபிஜித் வெளியே சென்றுவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு ஓட்டல் ஊழியர்கள், அவரது அறையை திறந்து பார்த்தனர்.
அப்போது ஷில்பா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஹோட்டல் சிசிடிவியை சோதனை செய்த போது அபிஜித்தின் புகைப்படம் அதில் பதிவாகியிருந்தது.
இதனிடையே அபிஜித், ஷில்பாவை கொலை செய்ததாகவும், அதற்கான காரணத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in