1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் மரணம்.. உடற்பயிற்சியின்போது உயிர் பிரிந்தது..!

பிரபல நடிகர் மரணம்.. உடற்பயிற்சியின்போது உயிர் பிரிந்தது..!

பிரபல ஹிந்தி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி. மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், 'குசும்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அத்துடன், 'கசௌதி ஜிந்தகி கே', 'சுபியானா இஷ்க் மேரா', 'ஜித்தி தில் மானே நா', 'வாரிஸ்' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் மரணம்.. உடற்பயிற்சியின்போது உயிர் பிரிந்தது..!

இந்நிலையில், நேற்று இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் உடனடியாக அவரை கோகிலாபென் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சிக்கு அலிசியா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். அவரின் மறைவு பாலிவுட் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கடந்த ஆண்டு, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இதேபோல் ஜிம்மில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுமஸ்தான உடல் மோகத்தால் அதிகரித்து வரும் அதீத உடற்பயிற்சி மரணங்கள் குறித்து பாலிவுட் தரப்பில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது பதிவில், "இதுபோன்ற துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் இன்றி அதீத உடற்பயிற்சியில் ஈடுபடுவது முட்டாள்தனமானது. உடனடியாக இந்தபோக்கினை சரிசெய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like