1. Home
  2. தமிழ்நாடு

திரையரங்கள் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் கார்த்தி படம் விரைவில் ஒடிடியில்..!!

திரையரங்கள் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் கார்த்தி படம் விரைவில் ஒடிடியில்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. கிராமத்து கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, சிட்டியில் கலக்கும் ஹீரோவாக இருந்தாலும், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி எந்த கெட்டப்களிலும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடுவார். அந்த வகையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'சர்தார்'. இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். சர்தார் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


திரையரங்கள் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் கார்த்தி படம் விரைவில் ஒடிடியில்..!!

மேலும் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு இயக்குநர் மித்ரனுக்கு டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றைப் பரிசாகத் தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் 'சர்தார்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வருகிற 18ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


Trending News

Latest News

You May Like