1. Home
  2. தமிழ்நாடு

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. மீன்வளத்துறை எச்சரிக்கை..!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. மீன்வளத்துறை எச்சரிக்கை..!

கடல் அதிகமான சீற்றத்துடன் காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு, திருப்பாலைவனம், மணலி, புதுநகர், சோழவரம், பஞ்செட்டி, காரனோடை, காட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.


இந்நிலையில், பழவேற்காடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். பலத்த காற்று மற்றும் கடல் அதிகமான சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

படகுகளை கரையில் பாதுகாப்பாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் யாரும் செல்ல வேண்டாம். மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like