1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது..?: உணவுத் துறை செயலர் விளக்கம்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது..?: உணவுத் துறை செயலர் விளக்கம்..!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி, வெல்லம், கரும்பு ஆகியவற்றுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 2 அடி கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன், ரேஷன்கார்டு தாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதற்காக, ரூ.2,363 கோடிக்கும் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டது.


திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதன் தரம் குறித்து ஆங்காங்கே சர்ச்சைகள் எழுந்த நிலையில், எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பாக என்ன வழங்கலாம் என ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து உணவுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது; "பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் எதையும் குறிப்பிட முடியாது. எனவே, பொங்கல் தொகுப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராமல் எதையும் தெரிவிக்க இயலாது" எனக் கூறினார்.

Trending News

Latest News

You May Like