1. Home
  2. விளையாட்டு

விவாகரத்து பெறும் நட்சத்திர ஜோடி?!

விவாகரத்து பெறும் நட்சத்திர ஜோடி?!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர்.

ஆனாலும் இருவரும் தங்கள் நாட்டை தங்கள் விளையாட்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக சானியா டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்.


விவாகரத்து பெறும் நட்சத்திர ஜோடி?!

இதனிடையே, சானியாவும் சோயப் மாலிக்கும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சோயப் அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சானியா மிர்சாவுக்கு துரோகம் செய்துவருவதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அண்மையில் சானியா வெளியிட்டு பதிவு ஒன்றில், உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன, அல்லாவைக் காண… என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன் கடினமான நாள்களைக் கடந்து செல்லும் தருணங்கள் என்று குறிப்பிட்டு தனது மகன் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.


விவாகரத்து பெறும் நட்சத்திர ஜோடி?!


கடந்த 31ஆம் தேதி இருவரும் சேர்ந்து தங்களது மகனின் பிறந்த நாளை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை சோயப் மாலிக் மட்டுமே வெளியிட்டு இருந்தார். இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும், ஆனால் மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like