பாஜக சார்பில் களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!!
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
27 ஆண்டுகளாக அங்கு அதிகாரத்தில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது. டெல்லி மாடல், பஞ்சாப் மாடல் ஆட்சியை முன்வைத்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முயற்சித்து வருகிறது.
நீண்ட காலமாக ஆட்சிக்கு வரமுடியாத காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் குஜராத் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரிவாபா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஹரி சிங் சோலங்கியின் குடும்பத்தில் இருந்து ரிவாபா வந்திருந்தாலும் அவர் தற்போது பாஜகவின் அங்கமான கர்னி சேனாவின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என கட்சித் தலைமை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் குஜராத் தேர்தலி போட்டியிடும் 160 பாஜக வேட்பாளர்களை அந்த கட்சி தலைமை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஹர்திக் படேல் விரம்கம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
newstm.in