1. Home
  2. தமிழ்நாடு

கல்வி என்பது லாபம் ஈட்டும் தொழில் அல்ல: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

கல்வி என்பது லாபம் ஈட்டும் தொழில் அல்ல: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

கல்வி லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல என்று ஆந்திர பிரதேச அரசின் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டண தொகை குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. இதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி ஆந்திர பிரதேச அரசு வெளியிட்ட அரசாணையில், 2017 - 2020-ம் ஆண்டுக்கான படிப்பு கட்டண தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தது.


எனினும், அரசின் இந்த உத்தரவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர பிரதேச அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சுதான்ஷூ தூலியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டண தொகையானது முன்பு நிர்ணயித்த தொகையை விட 7 மடங்கு அதிகம். இது, எந்த வகையிலும் நியாயமல்ல. கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல. எப்போதும், படிப்பு கட்டணத்திற்கு வசூலாகும் தொகையே போதியது என்று அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like