நம் தேச தந்தையை அவமதித்த அமேசான்... கொந்தளிப்பில் மக்கள்..!!
ஒரு இணைய புத்தக சந்தையாக ஆரம்பிக்கப்பட்ட 'அமேசான்' அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். உலகின் எந்த எல்லையில் இருந்தாலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்கும் அமேசான் நிறுவனம் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் மாட்டியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செருப்புகள் மற்றும் உள்ளாடைகளில் மகாத்மா காந்தி, கடவுள்களின் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன. ஆகவே, அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்து மத உணர்வை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இது நாட்டில் எப்போது வேண்டுமானாலும் சமுதாய பதற்றத்தை தூண்டலாம். எனவே, அமேசான் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று மேலும் நடக்காமல் இருக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தார்.
நாட்டு மக்களிடையே விரோதத்தை தூண்டுகின்ற வகையில் செயல்படுகின்ற இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, கிருஷ்ணகுமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது . இந்த மனு மீது மத்திய , மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.