1. Home
  2. தமிழ்நாடு

ரீல்ஸ் மோகம்… மனைவியை கொன்ற கணவன்!!

ரீல்ஸ் மோகம்… மனைவியை கொன்ற கணவன்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் (38), அவரது மனைவி சித்ரா (35) ஆகிய இருவரும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

அமிர்தலிங்கம் திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சித்ரா டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது.

டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ரீல்ஸ், இன்ஸ்டா என அதிலேயே தனது நேரத்தை அதிக அளவில் செலவழித்துள்ளார். அதிக ஃபாலோயர்கள் கிடைத்த நிலையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என சித்ரா தனியாக சென்னையில் குடியேறியுள்ளார்.


ரீல்ஸ் மோகம்… மனைவியை கொன்ற கணவன்!!

இந்நிலையில் பெரிய மகளுக்கு திருமணம் என்பதால் கடந்த வாரம் மீண்டும் திருப்பூர் திரும்பி உள்ளார். திருமணம் முடிந்து ஒருவாரம் ஆன நிலையில் மீண்டும் சென்னை செல்ல போவதாக கணவர் அமிர்தலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமிர்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவர் மனைவி அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

விரைந்து சென்ற போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி தலைமறைவாக இருந்த அமிர்தலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like