1. Home
  2. தமிழ்நாடு

ஏரியில் விழுந்த பயணிகள் விமானம்!!

ஏரியில் விழுந்த பயணிகள் விமானம்!!

மோசமான வானிலை காரணமாக தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


ஏரியில் விழுந்த பயணிகள் விமானம்!!

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமானம் 100 மீட்டர் உயரத்தில் நடுவானில் சென்ற போது மோசமான வானிலை நிலவியது.

மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தண்ணீரில் மூழ்கியது. விமானத்தில் இருந்து பயணிகள் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like