1. Home
  2. தமிழ்நாடு

சினிமா பாணியில் கார் மீது அமர்ந்து சென்ற பிரபல நடிகர்!!

சினிமா பாணியில் கார் மீது அமர்ந்து சென்ற பிரபல நடிகர்!!

ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக குண்டூரில் 'இப்படம்' என்ற கிராமத்தில் வீடுகள் இடிக்கப்பட்டன. ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து சில காட்சிகள் ஆறுதலும் தெரிவித்து வருகின்றன.


சினிமா பாணியில் கார் மீது அமர்ந்து சென்ற பிரபல நடிகர்!!


அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் நேற்று 'இப்படம்' பகுதி மக்களை நேரில் சந்திக்க சென்றார்.

வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற பவன்கல்யாண், சினிமா பாணியில் காரின் மேற்கூறையில் அமர்ந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது, பிரத்யேக ட்ரோன் மூலம் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவர் அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இவரது செயலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது சினிமா ஷூட்டிங் இல்லை என்று கூறிவருகின்றனர். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like