1. Home
  2. தமிழ்நாடு

பேத்தியை பெற்றெடுத்த பாட்டி..!!

பேத்தியை பெற்றெடுத்த பாட்டி..!!

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜெப் ஹாக். இவரது மனைவி கேம்ப்ரியா. இவருக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்ததால் அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். இதனால் அவர் குழந்தைப் பேறு அடைய முடியாத நிலை ஏற்பட்டது.

பேத்தியை பெற்றெடுத்த பாட்டி..!!

இந்த நிலையில் கேம்ப்ரியாவின் மாமியாரும் ஜெப் ஹாக்கின் தாயான நான்சி ஹாக் (56), வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்று கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி, வாடகைத்தாயாக இருந்து தனது மகன் மற்றும் மருமகளுக்காக அழகான பெண் குழந்தையை பெற்று கொடுத்து இருக்கிறார்.

ஜெப் ஹாக் - கேம்ப்ரியா தம்பதிக்கு இது 5-வது குழந்தையாகும். தனது மாமியார் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தது குறித்து உருக்கமாக கேம்பரியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்று கொடுத்த தாயாரை பெருமைபடுத்தும் விதமாக தனது மகளுக்கு ஹன்னா என்று பெயர் சூட்டியிருப்பதாக ஜெப் ஹாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உதவி செய்த மருத்துவர் டாக்டர் ரஸ்சல் பவுல்க் கூறுகையில், "தனது பேரக்குழந்தையை ஒருவர் பெற்று எடுப்பது என்பது வழக்கத்திற்கு மாறானது தான். வயது உண்மையில் ஒரு கட்டுப்படுத்தும் காரணியாக இல்லை. உண்மையில் இது தனி நபர் ஒருவரின் ஆரோக்கிய உடல் நிலையை சார்ந்தது" என்றார்.



Trending News

Latest News

You May Like