1. Home
  2. தமிழ்நாடு

பாம்புக்கு பயந்து அசைவம் சாப்பிடாத வினோத கிராமம்!!

பாம்புக்கு பயந்து அசைவம் சாப்பிடாத வினோத கிராமம்!!

ஒடிசாவில் மாநிலம் தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராம மக்கள் பாம்பு கடிக்கு பயந்து அசைவ உணவே சாப்பிடுவதில்லை.

அதன் பின்னணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர்.

காலம், காலமாக இதனை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் என்றும் முன்னோர் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.


பாம்புக்கு பயந்து அசைவம் சாப்பிடாத வினோத கிராமம்!!


இதனால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள். சைவ உணவை சாப்பிடுவதால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் ஆடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளையும் வளர்ப்பதில்லை.

தங்கள் நம்பிக்கைக்கு எதிராக அங்குள்ள யாராவது அசைவம் சாப்பிட்டால் அவர் கண்டிப்பாக கடவுளின் தண்டனையை அனுபவிப்பார் என்றும் கிராம மக்கள் உறுதியாக கூறுகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like