1. Home
  2. தமிழ்நாடு

சாகித்ய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..!

சாகித்ய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..!

கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான டி.பி.ராஜீவன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 63.

கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி (யுடிஎஃப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றினார். கவிதைகள், பயணக் கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள டி.பி. ராஜீவன், திரைக்கதை எழுத்தாளரும் கூட.


அவர் எழுதிய 'பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை' என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும், 'கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்' என்ற நாவல் 'நியம்' என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

இதில், 'கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்' நாவலுக்காக 2014ல் கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றார். அத்துடன், அமெரிக்காவில் லெட்டிக் ஹவுஸ் பெல்லோஷிப் மற்றும் ராஸ் பெலோ பவுண்டேஷன் பெல்லோஷிப் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

Trending News

Latest News

You May Like