1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்.. சென்னையில் பரவி வரும் 'மெட்ராஸ் ஐ'..!!

மக்களே உஷார்.. சென்னையில் பரவி வரும் 'மெட்ராஸ் ஐ'..!!

ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் கண் நோய் தொற்று பரவல் ஏற்படும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுகிறது. கண் உறுத்தல், சிகப்பு நிறமாக மாறுதல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை கண் நோயின் அறிகுறியாகும்.

இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள், அதிகளவில் காணப்படுகின்றனர். பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அறிகுறி ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும்.

சிலர் `மெட்ராஸ் ஐ'தானே என்று அலட்சியப்படுத்தி, சுய மருத்துவம் செய்துகொள்கிறார்கள். மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பிறகு, பிரச்னை தீவிரமானதும் கண் மருத்துவர்களை நாடும் போக்கு இருக்கிறது. இவர்கள் செய்யும் தாமதத்தால் அந்த நோய் அவர்களிடமிருந்து பிறருக்குப் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

அதே போல் ஒரு கண்ணில் தொற்று ஏற்பட்டால் அடுத்த கண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமாகச் செயல்படுவது நல்லது. இது எளிதில் குணப்படுத்தக்கூடிய சாதாரணமான நோய்த் தொற்று என்பதால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் முற்றிலும் குணமாகிவிடும்.


Trending News

Latest News

You May Like