1. Home
  2. தமிழ்நாடு

பலாத்கார வழக்கில் லஞ்சம்.. கான்ஸ்டபிள் ஆனார் டிஎஸ்பி..!

பலாத்கார வழக்கில் லஞ்சம்.. கான்ஸ்டபிள் ஆனார் டிஎஸ்பி..!

த்தரப் பிரதேசத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பெண் ஒருவர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 'சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் என்னை பலாத்காரம் செய்தனர்' என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை செய்து வந்துள்ளார். அதன்பின்பு அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். எனினும், போலீசார் தனது புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண் அப்போது கூறினார். வழக்கில், குற்றவாளிகளிடம் இருந்து போலீசார் லஞ்சம் பெற்றுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.

பலாத்கார வழக்கில் லஞ்சம்.. கான்ஸ்டபிள் ஆனார் டிஎஸ்பி..!

இதனை தொடர்ந்து, அரசு நிர்வாகம், ராம்வீரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில், இந்த வழக்கில் சர்மா லஞ்சம் பெற்ற விவரம் தெரிய வந்தது. அவர், பலாத்கார வழக்கு விசாரணையில், குற்றவாளிகளிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கிய வீடியோ அரசின் கவனத்திற்கு சென்றது.

இதனால், பணியிடை நீக்கத்தில் இருந்து வந்த வித்யா கிஷோர் சர்மாவை பதவியிறக்கம் செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தார். முதல்வரின் இந்த அதிரடி உத்தரவால் டி.எஸ்.பி. பணியில் இருந்து மீண்டும் வித்யா கிஷோர் சர்மா முதன்முதலாக அவர் போலீசில் சேர்ந்த கான்ஸ்டபிள் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like