1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி!!

நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

விஜயதசமி, 75ஆவது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டது. மேலும் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.


தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி!!


இந்நிலையில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட எஸ்.பிகளுக்கு டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டம், ஒழுங்கு, சூழலுக்கு ஏற்றவாறு அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like