1. Home
  2. தமிழ்நாடு

இந்த பாடங்களை நீக்க வேண்டும்: அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

இந்த பாடங்களை நீக்க வேண்டும்: அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இருவிரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பாதிப்புக்குள்ளான நபருக்கு இருவிரல் சோதனை நடத்தக் கூடாது. இந்த நடைமுறை இன்றும் நடைமுறையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை.

மேலும், இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இருவிரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like