1. Home
  2. தமிழ்நாடு

சாக்லெட்டில் மாட்டு இறைச்சி கலப்பு!?

சாக்லெட்டில் மாட்டு இறைச்சி கலப்பு!?

தீபாவளி பண்டிகைக்காக காட்பரி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தை வெளியிட்டனர். அதில் தெருவோரத்தில் விளக்கு விற்பனை செய்யும் நபர் ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் காட்பரி சாக்லேட் பரிசு பெட்டியை வழங்குவார்.

அதில் உள்ள QR code மூலம் அருகில் உள்ள வாடிக்கையாளர்களை விற்பனையாளர்களுடன் இணைக்கும் காட்பரியின் shop for shopless என்ற புதிய திட்டத்தையும் விளம்பரப்படுத்துவர்.

இந்த விளம்பரத்தில் தெருவில் விளக்கு விற்பனை செய்யும் வியாபாரியின் பெயர் தாமோதர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் காட்பரி நிறுவனம், பிரதமரின் தந்தை பெயரான தாமோதர் என்ற பெயரை வேண்டுமென்றே உபயோகப்படுத்தியுள்ளனர் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பேசத் தொடங்கினர்.


சாக்லெட்டில் மாட்டு இறைச்சி கலப்பு!?


பின்னர், விஸ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி, காட்பரியின் விளம்பரத்தைப் பதிவு செய்து அதில் பிரதமரின் தந்தையின் பெயரை இருளில் உள்ள கடைக்காரராகக் காட்டுவதற்காகவே வெளியிடப்பட்டது என்று குற்றம் சாட்டி கூறினார். மேலும் #Boycottcadbury என்ற ஹாஸ்டாக்கை இணைத்துப் பதிவு செய்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் தயார் செய்யும் காட்பரியில் மாட்டு இறைச்சி இருப்பதாகக் கூறி பரலாகப் பேசப்பட்டது. அதற்கு காட்பரி நிறுவனத்திடம் இருந்து இந்தியாவில் சாக்லேட் சைவ முறையில் தான் தாயார் செய்யப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

தற்போது அதனுடன் இணைந்து மாட்டு இறைச்சி வதந்தியும் ட்ரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் காட்பரி சாக்லேட்டில் மாட்டு இறைச்சி உள்ளது என்று வேறு நாட்டில் அளிக்கப்பட்ட தகவலின் புகைப்படங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like