1. Home
  2. தமிழ்நாடு

பசும்பொன்னில் பிரபல நடிகர் சாகும் வரை உண்ணாவிரதம்..!!

பசும்பொன்னில் பிரபல நடிகர் சாகும் வரை உண்ணாவிரதம்..!!

பிரபல நடிகர் கருணாஸ் வெளியிட்டிருக்கும் அந்த ஆடியோவில், '' நான் நடிகர் கருணாஸ் பேசுறேன். பசும்பொன்னில் நடக்க இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உடைய குருபூஜை விழாவிலே நாளை பசும்பொன்னில் என்னுடைய சொந்த இடத்தில் அன்னதானமும் மதுரை விமான நிலையத்திற்கு தெய்வத்திருமகன் சுதந்திரப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உடைய பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல நூற்றாண்டு காலங்களாக வலியுறுத்தி இருக்கக்கூடிய நிலையில், நான் பாரதப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், கடந்த மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் இதற்கு முன்பாக இருந்த முதலமைச்சர், இன்றைய முதலமைச்சர் இவர்கள் அத்தனை பேருக்கும் நான் கோரிக்கையாக தொடர்ந்து சட்டமன்றத்தில் வழியுறுத்தப்பட்டிருக்கக்கூடிய ஒரு கோரிக்கையை முன் வைத்து, நான் ஒரு அரங்கம் அமைத்திருந்தேன்.

பசும்பொன்னில் பிரபல நடிகர் சாகும் வரை உண்ணாவிரதம்..!!

அதை எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கமுதியில் இருக்கக்கூடிய டிஎஸ்பி அவர்கள் தன்னிச்சையாக வருவாய் துறை, நிர்வாகிகளுடைய யாருடைய ஆலோசனை இல்லாமல் அந்த ஒட்டுமொத்த அரங்கத்தையும் அகற்றி இருக்கிறார் . இதை வன்மையாக முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கண்டிப்பதோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்கக்கூடிய அந்த கோரிக்கையை தொடர்ந்து, நான் என்னுடைய சொந்த இடத்தில் பசும்பொன்னிலே சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக முடிவெடுத்திருக்கிறேன். இதையும் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நன்றி வணக்கம் . ''என்று சொல்லி இருக்கிறார்.



Trending News

Latest News

You May Like