1. Home
  2. தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய பிரபல பைக் ரேஸர்!!

விபத்தில் சிக்கிய பிரபல பைக் ரேஸர்!!

இந்தியாவின் மிகவும் பிரபலமான பைக் ரேஸரான ஜாட் பிரப்ஜோத், சூப்பர் பைக்குகளில் இந்தியாவின் பல்வேறு சாலைகளில் பயணம் செய்துள்ளார்.

பயணங்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார். இதனால் இவரது யூடியூப் சேனலை 3 மில்லியனுக்கு மேல் சந்தாதாரர்கள் பின்தொடர்கின்றனர்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதங்களில் 1.2 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் கடந்த 25ம் தேதி டெல்லியில் இருந்து நேபாளத்திற்கு Kawasaki H2 என்ற இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.


விபத்தில் சிக்கிய பிரபல பைக் ரேஸர்!!

அப்போது, நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள கஜூரி பகுதியில் அதிவேகமாக சென்றபோது சாலையில் சென்ற 79 வயது முதியவர்மீது மோதினார். விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜாட் பிரப்ஜோத் கஜூரிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் காத்மாண்டுவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like