1. Home
  2. லைப்ஸ்டைல்

டவ் ஷாம்பூ பயன்படுத்தினால் கேன்சர் வரும் அபாயம்!!

டவ் ஷாம்பூ பயன்படுத்தினால் கேன்சர் வரும் அபாயம்!!

பென்சீன் வேதிப்பொருள் கலந்ததின் காரணமாக தனது தயாரிப்புகளான டவ் ட்ரை ஷாம்பூ உள்ளிட்ட பல்வேறு ஷாம்புகளை திரும்பப் பெறுவதாக யுனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

2021 அக்டோபர் மாதத்திற்கு முந்தைய தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நெக்சஸ், சாவே, ட்ரெஸ்ஸமே, டிகி மற்றும் ஏரோஸார் ட்ரை ஷாம்பூ ஆகியவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


டவ் ஷாம்பூ பயன்படுத்தினால் கேன்சர் வரும் அபாயம்!!

ஜான்சன் அண்ட் ஜான்சன், நியூட்ரோஜீனா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் நிறுவனத்தின் பனானா போட், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் யுனிலீவரின் சாவே ஆகிய பொருட்கள் பலவும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தி பேன்டீன் மற்றும் ஹெர்பல் எசன்ஸ் ட்ரை ஷாம்பூக்களையும் திரும்பப் பெற்றது. இது கடந்த டிசம்பரில் நடந்தது. அப்போதும் பென்சீன் கலப்படம் பற்றியே கூறப்பட்டது.

யுனிலீவரும் இதே காரணத்துக்காகத் தான் ட்ரை ஷாம்பூக்களை திரும்பப் பெற்றதாகக் கூறுகிறது. பென்சீன் நம் உடலில் கலந்தால் நமக்கு ரத்தப் புற்றுநோய் அல்லது ரத்தம் சம்பந்தப்பட்ட பிற புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like