1. Home
  2. தமிழ்நாடு

தகாத உறவு சந்தேகம்.. கல்லூரி மாணவி, உறவினர் தூக்குப்போட்டு தற்கொலை..!

தகாத உறவு சந்தேகம்.. கல்லூரி மாணவி, உறவினர் தூக்குப்போட்டு தற்கொலை..!

பெங்களூரு அருகே, தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு பேசியதால் கல்லூரி மாணவியும், அவருடைய உறவினரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் அஸ்வத் (44). இவருடைய வீடடின் அருகே மதுரா(24) என்ற பி.எட். படிக்கும் மாணவி வசித்து வந்தார். அஸ்வத்தும், மதுராவும் உறவினர்கள். இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.


இதனால், அஸ்வத்துக்கும், மதுராவுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக அஸ்வத்தின் மனைவி லட்சுமியும், அவரது சகோதரரான சிக்கண்ணய்யாவும் சந்தேகப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அஸ்வத்துடன் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று மதுராவை சிக்கண்ணய்யா எச்சரித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த மதுரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரா தற்கொலை செய்துகொண்டது பற்றி அறிந்ததும் அஸ்வத்தும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like