1. Home
  2. தமிழ்நாடு

மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து!!

மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து!!

சென்னை அசோக் நகர் 2ஆவது அவென்யூ பகுதியில் உள்ள மருந்து குடோனில் இன்று திடீரென தீப்பற்றியது. கட்டடம் முழுவதும் தீ பரவியதால் அங்கிருந்த பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன.

தகவலறிந்து வந்த அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் தாம்பரம் பகுதியை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், கட்டடத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால், 2 மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தில் மாஸ்க், கையுறை, சானிடைசர், கார், இருசக்கர வாகனம், மினி லோடு வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.


மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து!!

கட்டிடத்தின் வெளிப்புறத்திலும் தீப்பற்றி எரிந்ததால், அருகில் இருந்த கட்டடங்களின் ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தீ விபத்தின் சேதங்கள் குறித்து விசாரித்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like