1. Home
  2. தமிழ்நாடு

தேவர் தங்கக் கவசம் யாருக்கு சொந்தம்..?: முன்னாள் அமைச்சர் விளக்கம்..!

தேவர் தங்கக் கவசம் யாருக்கு சொந்தம்..?: முன்னாள் அமைச்சர் விளக்கம்..!

முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசம் ஓபிஎஸ் எனும் தனிநபருடையதோ அல்லது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதோ கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசம் தனிநபருக்குச் சொந்தமானது கிடையாது. இதற்கு முன்புவரை, கட்சியின் பொருளாளர் என்பதற்காக அதில் ஓபிஎஸ்-க்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.


எனினும், இது ஓபிஎஸ் எனும் தனிநபருடையதோ அல்லது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதோ கிடையாது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அதிமுக நிச்சயம் கட்டுப்படும். தேவரின் தங்கக் கவசம் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விதிகளில் என்ன இருக்கிறது என்றால், அதிமுகவின் பொருளாளராக இருப்பவரின் கையெழுத்தைப் பெற வேண்டும் என்றுதான் உள்ளது.

எனவே, அதன் அடிப்படையில் எங்களிடம் கொடுக்க வேண்டும். அதேநேரம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு என்றென்றும் கட்டுப்படுவோம்" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like