1. Home
  2. விளையாட்டு

கிரிக்கெட் ரசிகருக்கு மாஸ் ரிப்ளே கொடுத்த சுந்தர் பிச்சை!!

கிரிக்கெட் ரசிகருக்கு மாஸ் ரிப்ளே கொடுத்த சுந்தர் பிச்சை!!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கூகுள் சிஇஐ சுந்தர் பிச்சை மாஸ் பதில் ஒன்றை அளித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலக கோப்பை போட்டி நேற்று நடைபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 53 பந்துகள் விளையாடிய விராட் கோலி, 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கூகுள் நிறுவன தலைமை செயலர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். மேலும், நேற்றைய போட்டியின் கடைசி 3 ஓவர்களை பார்த்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன் என பதிவிட்டிருந்தார்.


கிரிக்கெட் ரசிகருக்கு மாஸ் ரிப்ளே கொடுத்த சுந்தர் பிச்சை!!


அதற்கு கிரிக்கெட் ரசிகர் ஒருவர், "நீங்கள் முதல் மூன்று ஓவர்களையும் பார்க்க வேண்டும்" என இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தார்.

அதற்கு சுந்தர் பிச்சை, "நான் அதையும் பார்த்தேன். புவனேஷ்வர் குமாரும், அர்ஷதீப் சிங்கும் சிறப்பாக பந்து வீசினார்கள்" என பாகிஸ்தான் பேட் செய்த முதல் மூன்று ஓவர்களை குறிப்பிட்டு நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.

அவரது பதில், கிரிக்கெட் ரசிகர்களிடையே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like